ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்..
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்டவற்றை தடை செய்வது தொடர்பான அவசர சட்டத்திற்குக் கடந்த செப்டம்பரில் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 1ஆம் தேதியே ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
அவசர தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசிதழில் வெளியாகியுள்ள நிலையில், வரும் 17ஆம் தேதி தொடங்கவுள்ள சட்டப்பேரவையில் நிரந்தரச் சட்டமாக நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Comments