திமுக தலைவராக 2ஆவது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்..!
தி.மு.க.வின் தலைவர் பதவிக்கு 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாக உள்ளார்.
இன்று காலை கட்சியின் தலைவர் பதவிக்கு முதலமைச்சர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அப்பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார்.
வரும் 9ஆம் தேதியன்று நடைபெற உள்ள தி.மு.க.வின் பொதுக்குழுக் கூட்டத்தில், அதிகாரப்பூர்வமாக கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படுவார்.
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருவல்லிக்கேணி எம்.எல்.வும், தி.மு.க. இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
Comments