திருட வந்த இடத்தில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு மறந்து விட்டு சென்ற திருடன்..!

0 4268

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திருட வந்த இடத்தில் செல்போனை சார்ஜ் போட்ட திருடன் அவசரத்தில் அதனை எடுக்க மறந்துவிட்டு சென்றுள்ளான்.

சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் இயங்கி வந்த ஹோட்டலிலிருந்து இரவு மர்மநபர் ஒருவர் குதித்தோடுவதை கவனித்த அக்கம்பக்கத்தினர் ஹோட்டல் உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ஹோட்டலில் பதிவான சிசிடிவி காட்சிகளை உரிமையாளர் பார்த்தபோது பின்வாசல் வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர் வாயில் டார்ச்லைட்டை கவ்வியபடியே நோட்டமிட்டு, கல்லா பெட்டியிலிருந்த 20,000 ரூபாயை திருடிச்சென்றது தெரியவந்தது.

அங்கு சார்ஜ் போட்ட நிலையிலிருந்த திருடனின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதை வைத்து திருட்டில் ஈடுபட்டது யார் என விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments