நள்ளிரவில் இளம் பெண்ணை கடத்த முயன்ற இளைஞர்கள்... தடுத்த பெண்ணுக்கும், அவரது தாய்க்கும் அரிவாள் வெட்டு!

0 3161

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நள்ளிரவில் இளம்பெண்ணை கடத்த முயன்ற இளைஞர்கள், அப்பெண்ணையும், அவரது தாயையும் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோகிலா என்பவரை கார்த்திக் என்பவர் காதலித்ததாகவும், இதனை அப்பெண் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கோகிலாவை கடத்தி திருமணம் செய்ய, அஜித் என்பவருடன் கார்த்திக் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டின் பூட்டை உடைத்து, கோகிலாவை கார்த்திக் தூக்கிச் செல்ல முயன்ற நிலையில், அவரது தாய் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற கார்த்திக், அப்பெண்ணையும், அவரது தாயாரையும் அரிவாளால் தாக்கிவிட்டு அஜித்துடன் தப்பியோடினார்.

கடத்தலுக்கு பயன்படுத்தவிருந்த ஆட்டோவையும், அதன் ஓட்டுநரையும் துரத்திப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த அக்கம்பக்கத்தினர், தாயையும், மகளையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments