பெண் உயிரிழந்தது தொடர்பாக வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் பணி இடைநீக்கம்!

0 2816

மதுரையில் வேகத்தடையில் தனியார் பேருந்து வேகமாக சென்றதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழந்த விவகாரத்தில், வழக்கு பதியாமல் இருக்க, லஞ்சம் கேட்டதாக, காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22-ஆம் தேதி சென்னையிலிருந்து மதுரைக்கு சென்ற தனியார் பேருந்து, வேகத்தடையில் வேகமாக சென்றதால், பெண் பயணி ஒருவர் தலையில் பலத்த காயமடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்த நிலையில், அதுதொடர்பாக வழக்கு பதியாமல் இருக்க, ஒத்தக்கடை காவல் ஆய்வாளர் முருகேசன், பேருந்து உரிமையாளரிடம் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளரை, தென்மண்டல காவல்துறை துணைத் தலைவர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments