தவறான சிகிச்சையால் பிரசவத்தின் போது இறந்து பிறந்த குழந்தை - துணியால் சுற்றி கழிப்பறையில் மறைத்து வைத்ததாக குற்றச்சாட்டு ..!

0 4164

குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள சி.எஸ்.ஐ மிஷன் என்ற தனியார் மருத்துவமனையில், பிரசவத்தின் போது இறந்து பிறந்த குழந்தையை, உறவினர்களிடம் தெரிவிக்காமல் செவிலியர்கள் கழிப்பறையில் மறைத்து வைத்ததாக எழுந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இம்மருத்துவமனையில் ஷிபானா என்ற பெண்ணுக்கு நேற்றிரவு சிசேரியன் முறையில் பிரசவம் நடந்துள்ளது.

குழந்தை பிறந்ததும் உறவினர்களுக்கு எந்த தகவலும் சொல்லாமல் செவிலியர்கள் குழந்தையை எடுத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், உறவினர்கள் தேடிய போது, துணியால் சுற்றப்பட்டு கழிப்பறைக்கு அருகே குழந்தை சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தவறான சிகிச்சையால் குழந்தை இறந்ததை மறைக்கவே கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டதாக கூறி உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக மருத்துவமனை தரப்பில் முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments