ஈரானில் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா கருத்து

0 2486

ஈரானில், இளம்பெண் மஹ்சா அமினியின் மரணத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பெண்களுக்கு நடிகை சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஈரான் மட்டுமல்லாது பல நாடுகளில் போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, பல ஆண்டு கால மவுனத்திற்கு பிறகு வெளிவந்துள்ள பெண்களின் எதிர்ப்புக் குரல்கள், எரிமலையாக வெடித்துச் சிதறும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தங்களது தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தி வரும் பெண்களின் தைரியத்தை கண்டு தான் பிரம்மிப்பதாக தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா, பெண்களின் பிரச்சனைகளுக்கு ஆளும் வர்க்கத்தினர், அதிகாரிகள் செவி சாய்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments