வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிவு..!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாயை கடந்து வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு நேற்று 81 ரூபாய் 89 காசுகளாக இருந்த நிலையில், இன்றைய வர்த்தக தொடக்கத்தில் மேலும் 33 காசுகள் சரிந்து 82 ரூபாய் 22 காசுகளாக இருந்தது. உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments