விபத்தில் சிக்கி காயம் அடைந்த இளைஞர் உயிரிழப்பு... காவல்துறைக்கு பயந்து ஓடிய போது நிகழ்ந்த பரிதாபம்

0 4144

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் விபத்தில் சிக்கி காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது காவல்துறைக்கு பயந்து ஓடியதில் பரிதாபமாக  உயிரிழந்தார்.

முசுவனூத்தை சேர்ந்த அரசு பேருந்து டிரைவர் புலிகேசி வீடு செல்வதற்காக டிப்போ அருகே நின்ற போது மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த  லட்சுமணன் என்பவரின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

இதனை அடுத்து அவர்களை சிகிச்சைக்காக அரசு பேருந்தில் அழைத்து சென்ற போது போக்குவரத்து நெரிசல் காரணமாக அப்பேருந்து போலீஸ் நிலையம் முன்பு நின்றது. இதனைக் கண்ட லட்சுமணன் பயந்து போய் கீழே இறங்கி அருகில் உள்ள கடைக்குள் போய் பதுங்கி கொண்டார். ஆனால்  தலையில் ஏற்பட்ட காயத்திற்கு உரிய சிகிச்சை பெறாததால் அவர் நள்ளிரவில் அதே இடத்தில் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments