விளையாடும் போது துணிகள் காயவைப்பதற்காக கட்டியிருந்த கொடி கயிற்றில் சிக்கி மூச்சுத்திணறி பலியான சிறுவன்

0 3547
விளையாடும் போது துணிகள் காயவைப்பதற்காக கட்டியிருந்த கொடி கயிற்றில் சிக்கி மூச்சுத்திணறி பலியான சிறுவன்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் விளையாடும் போது துணிகள் காயவைப்பதற்காக கட்டியிருந்த கொடி கயிற்றில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தான்.

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் வசிக்கும் துரைப்பாண்டி - லட்சுமி தம்பதியின் ஒரே மகனான விசாகன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனாவான். நேற்று இரவு 8 மணியளவில் சிறுவனின் தாய் தையல் வேலை செய்துக் கொண்டிருந்தபோது ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த துணிக்காயப்போடும் கயிற்றை பிடித்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

இதில் கயிறு சிறுவனின் கழுத்தில் சிக்கி இறுக்கியதில் மூச்சு திணறி மயக்கமடைந்ததாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே மகனும் இப்படி இறந்து விட்டானே என்று அவனது பெற்றோர் கதறியழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments