அமெரிக்காவில் மர்ம மனிதனால் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் சடலமாக கண்டெடுப்பு

0 2723
அமெரிக்காவில் மர்ம மனிதனால் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் சடலமாக கண்டெடுப்பு

அமெரிக்காவில் மர்ம மனிதனால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவின் மெர்செட் கவுண்டி பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்தீப் சிங், தனது மனைவி, 8 மாத பெண்குழந்தை மற்றும் உறவினருடன் வசித்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த நான்கு பேரையும் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றான். அவர்களை மீட்க போலீசார் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

8 மாத பெண்குழந்தை உள்பட அவர்கள் 4 பேரின் சடலங்களும் கலிபோர்னியாவில் ஒரு பழத்தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டன. ஏற்கனவே குற்றச்செயல்களில் தண்டிக்கப்பட்ட 48 வயது கொள்ளையன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

விசாரணையை தொடங்குவதற்கு முன் அந்த நபர் தற்கொலைக்கு முயன்றதால் தற்போது ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக நகர மேயர் வெர்ன் வார்னே தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments