10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.. காதலன் போக்சோவில் கைது..!
10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை.. காதலன் போக்சோவில் கைது..!
திருவாரூர் மாவட்டத்தில், 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட விவகாரத்தில், பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் காதலனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
காட்டூர் விளாகம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான தீனதயாளனும், மாணவியும் காதலித்து வந்த நிலையில் இதுகுறித்து அறிந்த பெற்றோர் இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த மாணவி, யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
தீனதயாளன் தனது மகளை தாக்கி, பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தீனதயாளன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Comments