தமிழகம், புதுச்சேரியில் இந்த வாரம் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் - வானிலை ஆராய்ச்சி மையம்

0 2006
தமிழகம், புதுச்சேரியில் இந்த வாரம் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் - வானிலை ஆராய்ச்சி மையம்

தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இந்த வாரம் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments