ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பொறியியல் கல்லூரி மாணவர் விபரீத முடிவு..!

0 2533

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த கல்லூரி மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.

மணப்பாறை நாளங்காடியின் பின்புறம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் கிடந்த இளைஞர் உடலை மீட்ட ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தது மலையாண்டிப்பட்டியைச் சேர்ந்த 23 வயதான பொறியியல் இறுதியாண்டு படிக்கும் சந்தோஷ் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் கடந்த 6 மாதமாக ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான சந்தோஷ், வீட்டில் இருந்த தங்க மோதிரத்தை விற்றும், பணத்தை வைத்து ரம்மி விளையாடி இழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் விட்டை விட்டுச் சென்ற நிலையில், நேற்றிரவு “என் மரணத்திற்கு முழு காரணம் ஆன்லைன் ரம்மி தான்”, அதற்கு அடிமையாகி அதிக பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக் கொள்வதாக வாட்ஸ் அப் ஸ்டேடஸ் வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments