கல்வெட்டு வைப்பது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர், உறவினர்கள் தாக்கியதில் 6 பேர் காயம்..!

0 1942

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிய அங்கன்வாடி மையத்தில் கல்வெட்டு வைக்கும் பிரச்னையில் திமுக ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திம்ம சமுத்திரம் கிராம ஊராட்சியில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்ட நிலையில், அதில் பெயர் பலகை கல்வெட்டு வைக்க 8வது வார்டு உறுப்பினர் பிரியாவின் கணவர் அம்சநாதன், ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரனிடம்  வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், தனது பணிகளில் வார்டு உறுப்பினரின் கணவர் தலையிடுவதாக ஆத்திரமடைந்த தேவேந்திரன் அவரது உறவினர்களுடன் சேர்ந்து அம்சநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது இரு தரப்பும் கட்டை, கற்களால் தாக்கிக்கொண்டதில், அம்சநாதன், அவரது மனைவி உட்பட 6 பேர் காயமடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments