தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு அங்காடிகளில், சிறிய ரக கேஸ் சிலிண்டர் விற்பனை !

0 1944

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் 2  மற்றும் 5 கிலோ அளவுள்ள முன்னா, சோட்டு சிலிண்டர்கள் விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார். 

டியுசிஎஸ் சுயசேவை பிரிவுகள், பெட்ரோல் நிலையங்களில் விற்பனை செய்யப்படவுள்ள 2 கிலோ சிலிண்டர் 958 ரூபாய்க்கும் 5 கிலோ சிலிண்டர் ஆயிரத்து 515 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எரிவாயு தீர்ந்துவிட்டால் இந்த மாதம் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையான 2 கிலோவிற்கு 250 ரூபாயும், 5 கிலோவிற்கு  570 ரூபாயும் கொடுத்து நிரப்பிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments