ஜவுளிச் சந்தையில் பயங்கர தீ விபத்து.. பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் கருகி சேதம்..!

டெல்லியின் காந்தி நகர் ஜவுளிச் சந்தையில் உள்ள ஒரு கடையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புடைய துணிகள் எரிந்து கருகின. தீ வேகமாகப் பரவியதை அடுத்து 35க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
ஆனால் குறுகிய வீதிகளில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாததால் தீயை அணைப்பது பெரும் சவாலாக இருந்தது.
பல மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு உயிர்ச்சேதம் ஏதுமில்லாமல் தீ அணைக்கப்பட்டது.
Comments