தினமும் 2 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒபெக் முடிவு..!

நவம்பர் மாதத்தில் தினமும் இரண்டு மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஓபெக் கூட்டமைப்பில் உள்ள எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் முடிவு செய்திருப்பதற்கு வெள்ளை மாளிகை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஒபெக் ரஷ்யாவுடன் சேர்ந்து இந்த முடிவை எடுத்து இருப்பது குறுகிய நோக்கம் கொண்டது என்று அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஒபெக் முடிவால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.இதன் பாதிப்பால் பெட்ரோல் டீசல் விலைகள் கடுமையாக உயரும் என்று கூறப்படுகிறது.
Comments