வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை - தொழிலாளி கைது...

0 2202

ஆவடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவர்த்தனகிரி பொதிகை நகர் பகுதியில் வசித்து வந்தவர் சாவித்திரி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த ஆவடி போலீசார் கொலையாளி குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் மூதாட்டியை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த கார்பெண்டரான முனுசாமி என்பது தெரிந்தது.

இதையடுத்து முனுசாமியை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் பணத் தகராறில் இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments