தமிழகம் முழுவதும் கோவில்களில் நவராத்திரி விழா நிறைவு கோலாகலம்...

0 2656

சென்னை திருவொற்றியூர்  தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன்  கோவிலில்  நவராத்திரி விழாவின் 10ஆம் நாளான நேற்று உற்சவ  வடிவுடையம்மன்  மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருள தியாகராஜர் திரு நடனமாடி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

புதுச்சேரி யூனியன் காரைக்கால் அடுத்த திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற அம்பு போடுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் பணாசூரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. 

தூத்துக்குடியில் கிராம தேவதை என அழைக்கப்படும் மேலூர் பத்ரகாளியம்மன் கோவில் தசரா விழாவில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வீரலட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவிலில் நவராத்திரி நிறைவு விழாவினை ஒட்டி பெருமாள் குதிரை வாகனத்தில் அம்பு போடும் விழா நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments