ஏலச்சீட்டு நடத்தி 37 பேரிடம் ரூ.1.41 கோடி மோசடி - 3பேர் கைது...

0 2027

விழுப்புரம் மாவட்டத்தில் ஏலச்சீட்டு நடத்தி ஒரு கோடியே 41 லட்சம் ரூபாய் மோசடி செய்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.

கண்டமநல்லூரைச் சேர்ந்த மணவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேரும் 2ஆண்டுகளாக மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள் நடத்தும் ஏலச்சீட்டில் செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய வட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் நடத்திவந்த ஏலச்சீட்டில் ஒரு லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி மணவாளன் உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

புகாரின் பேரில் 3 பேரை கைது செய்த போலீசார் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments