தன்னைவிட மூத்த பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்.. பெற்றோரை பீர் பாட்டிலால் தாக்கிய மகன்..!

0 8185

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே, வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பெற்றோரை பீர் பாட்டிலால் கண்மூடித்தனமாகத் தாக்கிய மகனிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கொமரலிங்கத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தன்னை விட 6 வயது மூத்த பெண்ணை காதலித்து வந்தார். 10 நாட்களுக்கு முன், இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முயன்றபோது, மாரிமுத்துவின் பெற்றோர் வயதை காரணம் காட்டி அவர்களை பிரித்தனர்.

மனமுடைந்து காணப்பட்ட மாரிமுத்து, மது போதையில் பெற்றோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை பீர் பாட்டிலால் தாக்கியதுடன் தடுக்க வந்த தம்பியையும் பீர் பாட்டிலால் குத்தியதாகக் கூறப்படுகிறது. மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments