உகாண்டாவில் எபோலா வைரஸ்சால் 10 பேர் உயிரிழப்பு, 43 பேர் பாதிப்பு..!

ஆப்ரிக்க நாடான உகாண்டாவில் மயக்கவியல் மருத்துவர், எபோலா வைரஸ்சால் மரணமடைந்ததையடுத்து எபோலாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. வைரஸால் இதுவரை 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த பத்து பேர்களில் 4 பேர் சுகாதாரத்துறைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உகாண்டா அதிபர் இதுகுறித்து கூறும்போது, மக்கள் பதட்டமடையத் தேவையில்லை என்றும், இதற்காக ஊரடங்கு எதுவும் விதிக்கப்படாது என்றார்.
Comments