"பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது"-பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்த அமித்ஷா

0 2171

பாகிஸ்தானுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்த முடியாது என தெரிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, பயங்கரவாதத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமுடியாது என கூறினார்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய அவர், நரேந்திர மோடி தலைமையிலான அரசு பயங்கரவாதத்தை அழித்து, நாட்டின் அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மாற்றும் என குறிப்பிட்டார்.

கடந்த 1990 முதல் 42 ஆயிரம் பேரை பலிகொண்ட பயங்கரவாதத்தால், யாரேனும் பலனடைந்துள்ளனரா என கேள்வி எழுப்பிய அவர், ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்த முன்னாள் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments