10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.!

0 2558

ஆந்திர பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இந்த வாரம் தமிழகம், புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும், கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments