வண்டிகளுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு ஊழியர் ரசீது எடுத்து வருவதற்குள் பணம் தராமல் தப்பிய இளைஞர்கள்..!

0 2604
வண்டிகளுக்கு பெட்ரோல் போட்டுவிட்டு ஊழியர் ரசீது எடுத்து வருவதற்குள் பணம் தராமல் தப்பிய இளைஞர்கள்..!

சேலம் எருமாபாளையம் அருகே இருசக்கர வாகனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு ஊழியரிடம் ரசீதை கேட்டு திசைதிருப்பி தப்பிய இளைஞர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை அன்று நம்பர் பிளேட் இல்லாத இரண்டு உயர் ரக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஒரு வாகனத்திற்கு ஆயிரத்து 120 ரூபாய்க்கும், மற்றொரு வாகனத்திற்கு 980 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் தப்பியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments