மர்ம தேசம், ஜீ பூம்பா தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் லோகேஷ் தற்கொலை..!

0 2710
மர்ம தேசம், ஜீ பூம்பா தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் லோகேஷ் தற்கொலை..!

மர்ம தேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்ற நடிகர் லோகேஷ் விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ், மனைவி பிரிந்து சென்று விவாகரத்து கேட்டதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 2ஆம் தேதி பூச்சி மருந்து குடித்துவிட்டு காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்த அவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், 2 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments