தங்கநகை மொத்த வியாபாரியிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் மோசடி - விற்பனை மேலாளர் கைது..!

தங்கநகை மொத்த வியாபாரியிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள நகைகள் மோசடி - விற்பனை மேலாளர் கைது..!
பெங்களூரை சேர்ந்த மொத்த நகை வியாபாரியிடம் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மோசடி செய்த மார்க்கெட்டிங் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரை சேர்ந்த ஷாகன்லால் சாத்ரி என்பவர் தங்க நகைகளை தயாரித்து கோவையில் உள்ள பல நகைக்கடைகளுக்கு மொத்த விற்பனை செய்துவருவதாக கூறப்படுகிறது.
இவரிடம் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வந்த ஹனுமான் திவேஷி என்பவர், 13 கிலோ 580 கிராம் எடையுள்ள தங்க நகைகளை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஷாகன்லால் சாத்ரி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் விற்பனை மேலாளர் ஹனுமான் திவேஷியை கைது செய்துள்ளனர்.
Comments