இமாச்சலப்பிரதேசத்தில் ரூ.1,470 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

0 3486
இமாச்சலப்பிரதேசத்தில் ரூ.1,470 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!

இமாச்சல பிரதேசத்தில் ஆயிரத்து 470 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

மேலும் 3 ஆயிரத்து 650 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

முதல் நிகழ்ச்சியாக பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைக்கும் மோடி, பின்னர் லுஹ்னு மைதானத்துக்கு சென்று பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

தொடர்ந்து பிற்பகல் 3.15 மணிக்கு குலு மைதானத்தில் நடைபெறும் தசரா கொண்டாட்டங்களில் மோடி கலந்து கொள்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments