உத்தரகாண்ட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 32 பேர் உயிரிழப்பு - 21 பேர் காயம்..!

0 1788
உத்தரகாண்ட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : 32 பேர் உயிரிழப்பு - 21 பேர் காயம்..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்தனர்.

ஹரித்வார் மாவட்டத்தின் லால்தாங்கில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து பௌரி மாவட்டத்தில் உள்ள லான்ஸ்டவுன் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 350 மீட்டர் ஆழ பள்ளத்தாக்கில் உருண்டு கவிழ்ந்தது.

பேருந்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 48 பேர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், 32 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.

தகவலறிந்து வந்த மீட்புப் படை வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments