மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழ் இளைஞர்கள் மீட்பு - 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்..!

0 2344
மியான்மரில் சிக்கித் தவித்த 13 தமிழ் இளைஞர்கள் மீட்பு - 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்..!

தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மியான்மரில் சிக்கி சட்டவிரோத காரியங்களில் ஈடுபடுத்தப்பட்ட 13 தமிழர்கள் இன்று அதிகாலை சென்னை விமானநிலையம் வந்து சேர்ந்தனர்.

நேற்று தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து விமானம் மூலமாக அவர்கள் அழைத்து வரப்பட்டனர். தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் முயற்சியால் மீட்கப்பட்டனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய 13 பேரை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments