18 மாநிலங்களில் 115 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை.. கோடிக்கணக்கில் பணம் நகைகள் பறிமுதல்..!

0 3605
18 மாநிலங்களில் 115 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை.. கோடிக்கணக்கில் பணம் நகைகள் பறிமுதல்..!

சிபிஐ அதிகாரிகள் தலைமையில், இன்டர்போல், அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலிய போலீசார் இணைந்து 18 மாநிலங்களில் 115 இடங்களில் சோதனை நடத்தினர்.

டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் கர்நாடகா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் போலி கால் சென்ட்டர் நடத்தியது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் தொடர்பான இந்த அதிரடி சோதனைகளின் போது 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் நடைபெற்ற சோதனையின் போது ஒரு கோடியே எண்பது லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் ஒன்றரை கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சிபிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேசன் சக்ரா என்ற பெயரில் பல்வேறு நாடுகளின் போலீசாரும் மாநில காவல்துறை அதிகாரிகளும் இந்த சோதனையில் பங்கேற்றனர்.டிஜிட்டல் ஆவணங்கள், லேப்டாப், கணினி செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments