ஆபாச படம் பார்த்ததாக 'சைபர்-கிரைம்' போலீசார் போல் பேசி, பணம் கேட்டு மிரட்டல்... பணம் இழந்தவர் அளித்த புகாரின் பேரில் 4 பேர் கைது..!

0 5701

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் ஜுவல்லரி கடையில் பணியாற்றிவரும் சந்திரகுமார் என்பவரை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர், சென்னை சைபர் கிரைம் போலீசிலிருந்து பேசுவதாகவும், செல்போனில் குழந்தைகளின் ஆபாசப்படங்களை அவர் பார்த்ததாகப் புகார் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

வழக்கிலிருந்து தப்ப வேண்டுமானால் 10,000 ரூபாய் தர வேண்டும் என மர்ம நபர் கூறியதை நம்பி சந்திர குமார் Phone Pay மூலம் பணத்தை அனுப்பியுள்ளார். பின்னர் அந்த நபரை தொடர்புகொள்ள முயன்றபோது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சந்திரகுமார் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.

போலி முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கிய தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 4 பேரை கைது செய்த போலீசார், இதேபாணியில் யாரிடமெல்லாம் மிரட்டி பணம் பறித்துள்ளனர் என விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments