இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஐபோன் மதிப்பு 5 மாதங்களில் ரூ.8,150 கோடி கடந்துள்ளதாக தகவல்..!

0 3512

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் மதிப்பு 5 மாதங்களில் 8 ஆயிரத்து 150 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு மார்ச்சில் 20 ஆயிரத்து 400 கோடி ரூபாயை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பதால், சீனாவில் ஐபோன்களை தயாரித்து வந்த ஆப்பிள், தற்போது மாற்று வழிகளைத் தேடுவதாக கூறப்படுகிறது.

இவை, சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை உலகிற்கான தொழிற்சாலையாக மாற்றும் பிரதமர் மோடியின் திட்டத்திற்கு சாதகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments