'ஆதிபுருஷ்' படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கவில்லை எனில் சட்டப்படி நடவடிக்கை - ம.பி. அமைச்சர்

0 6395

'பாகுபலி' நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான 'ஆதிபுருஷ்' படத்தில் ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட அப்படத்தின் டிரெயிலர் அண்மையில் வெளியானது.

டிரெயிலருக்கு சமூகவலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், மத அடையாளங்களை தவறாக வகையில் காட்டும் வகையிலான காட்சிகளை படத்தில் நீக்க வேண்டும் என இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளதாக நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments