தாய்லாந்து விமான நிலையத்திற்குள் 'குலோப் ஜாமுன்' எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு..!

0 2107

தாய்லாந்து நாட்டின் ஃபுக்கெட் விமான நிலையத்திற்குள் குலோப் ஜாமுன்களை எடுத்துச்செல்ல இந்திய பயணி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, அவர் அங்கிருந்த பணியாளர்களுக்கு அவற்றை பகிர்ந்தளித்தார்.

தாய்லாந்து விமான நிலைய ஊழியர்கள் குலோப் ஜாமுன்களை ரசித்து சாப்பிட்ட காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது.

விமான நிலைய ஊழியர்கள் அனுமதி மறுத்ததும் அவற்றை குப்பையில் வீசி வீணாக்காமல், அவர்களுக்கே அவற்றை ருசிக்க கொடுத்த இந்திய பயணியின் செயல் நெட்டிசன்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments