ஜப்பான் வான்வெளி வழியே ஏவி வடகொரியா ஏவுகணை சோதனை..! மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு, ஜப்பான் அரசு அறிவுறுத்தல்

ஜப்பான் வான்வெளி வழியே, வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, ஏவுகணை பறந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு, ஜப்பான் அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், பசிபிக் கடலில் ஏவுகணை விழுந்ததாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை, ஒரு பொறுப்பற்ற செயல் என, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Comments