ஒரே நாளில் 2 லட்சம் கோடி இழப்பை சந்தித்த எலான் மஸ்க், அதானி..!

0 17968

உலக பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் கவுதம் அதானி ஆகியோர் ஒரே நாளில் சுமார் 2 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புளூம்பெர்க் பில்லியனர்ஸ் பட்டியல் தகவலின்படி, இந்திய தொழிலதிபரான அதானியின் நிறுவன பங்குகள் தொடர் சரிவை கண்டதால், சுமார் 79 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பை அவர் சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 8.6 சதவீதம் சரிவை கண்டதால், சுமார் ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், உலக பணக்காரர்கள் வரிசையில் அதானி 4-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments