துபாயின் பாம் ஜூமேரா தீவின் பிராம்மாண்டமான பங்களா 82 மில்லியன் டாலர்க்கு விற்பனை..

0 1543


துபாயின் பாம் ஜூமேரா தீவின் பிராம்மாண்டமான பங்களா ஒன்று 82 மில்லியன் டாலர்க்கு விற்பனையாகி பாரசீக வளைகுடா எமிரேட்ஸின் மிக விலையுயர்ந்த குடியிருப்புக்கான புதிய சாதனை படைத்திருக்கிறது.

பனைமர வடிவிலான இந்த செயற்கை தீவில் பில்லியனர்ஸ் வரிசையில், காசா டெல் சோல் எனப்படும் இந்த பங்களா அமைந்துள்ளது.

தனியுரிமைச் சிக்கல்கள் காரணமாக வாங்குபவரின் விவரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கட்டுமானத்தில் உள்ள இந்த பங்களாவில் 15 கார்கள் நிறுத்தக்கூடிய பார்க்கிங் வசதியுடன், 18 படுக்கையறைகள், உடற்பயிற்சிக்கூடம், திரையரங்கம் என பல்வேறு வசதிகளுடனும் அமைய உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments