ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்..!

0 2002
ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்..!

உக்ரைன் மீதான ரஷ்யா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கும் நிலையில், கெர்சன் பிராந்தியத்தில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி உக்ரைன் ராணுவம் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்ட கெர்சனில் உக்ரைன் படைகள் முன்னேற்றம் அடைந்து, ரஷ்ய படையிடம் இருந்து முக்கிய நகரை மீட்டு பதிலடி கொடுத்துள்ளது.

லிமன் நகரில் வெற்றிக் கொடி நாட்டிய உக்ரைன் படைகள், தொடர்ந்து கெர்சனிலும் முன்னேறி வருகின்றன.

ரஷ்யப் படையினருக்கு ஆயுதங்களையும், உணவுப் பொருள்களையும் கொண்டு வருவதற்குப் பயன்பட்ட பல்வேறு பாலங்களை உக்ரைன் ராணுவம் தகர்த்தெறிந்ததுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments