எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8.3 கோடி மதிப்பிலான போதை பவுடர் - உகண்டா நாட்டு பெண் கைது..!

0 2295
எத்தியோப்பியாவிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8.3 கோடி மதிப்பிலான போதை பவுடர் - உகண்டா நாட்டு பெண் கைது..!

எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 8 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ 187 கிராம் போதை பவுடர் பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், உகண்டா நாட்டு பெண்ணை கைது செய்தனர்.

எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னைக்கு பயணிகளுடன் சர்வதேச விமானம் வந்தது. சுற்றுலா விசாவில் வந்த உகண்டா நாட்டு நம்பீரா நோலீன் என்ற பெண் பயணியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இதையடுத்து, அப்பெண்ணின் உடமைகளை சோதனை செய்த அதிகாரிகள் பையில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளை கண்டுபிடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments