மரக்கிளையை வெட்டிய விவசாயிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது..!

0 2186
மரக்கிளையை வெட்டிய விவசாயிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது..!

திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் மரக்கிளையை வெட்டிய விவசாயிடம் 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது செய்யப்பட்டார்.

மஞ்சம்பட்டியை சேர்ந்த நாராயணசாமி என்பவர் தனது விவசாய நிலத்தை ஒட்டி மின்கம்பி செல்வதால் மரத்தின் கிளைகள் உரசுவதை தவிர்ப்பதற்காக அதனை வெட்டியுள்ளார்.

இதனை அறிந்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி போலீசில் புகார் அளிக்காமல் இருப்பதற்கு அவரிடம் 10ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

நாராயணசாமி ரசாயனம் தடவிய 10ஆயிரம் ரூபாயை லட்சுமியிடம் வழங்கிய போது பிடிபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments