3 நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

0 1864
3 நாட்கள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா..!

மூன்று நாட்கள் பயணமாக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். 

ஜம்மு சென்ற அவரை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர். பயணத்தின்போது பல்வேறு சமூக பிரதிநிதிகளையும் அமித்ஷா சந்திக்கிறார்.

பஹாரிகளை எஸ்.டி பிரிவில் சேர்க்க முன்மொழியப்பட்டதற்கு குஜ்ஜார்கள் மற்றும் பேக்கர்வால்கள் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனால் அமித்ஷாவின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments