நவராத்திரி நிறைவு - ஆயுதபூஜை கொண்டாட்டம் கோலாகலமாக தொடக்கம்..!

0 2392
நவராத்திரி நிறைவு - ஆயுதபூஜை கொண்டாட்டம் கோலாகலமாக தொடக்கம்..!

நவராத்திரி நிறைவடைந்த நிலையில், வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் இன்று ஆயுதபூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகைதான் நவராத்திரி. இதில் கல்வி மற்றும் தொழில் சிறக்க சரஸ்வதி தேவியை வழிபடும் நாள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது.

இன்று சரஸ்வதி பூஜையையொட்டி, வீடுகளில் பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களை வைத்து, அவல், பொரி, சுண்டல் ஆகியவற்றை சரஸ்வதிக்கு படையலிட்டு வழிபடுகின்றனர்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதைப் போற்றும் வகையில், ஆயுத பூஜை நாளின் போது, தொழில் சம்மந்தமான கருவிகள், ஆயுதங்கள் மற்றும் வாகனங்களுக்கு மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து, பழம், பொரி, சுண்டல் ஆகியவற்றைப் படையலிட்டு வழிபடுகின்றனர். கடைகளிலும் அலுவலகங்களிலும் தங்கள் தொழில் சிறக்க இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments