நவராத்திரி 'கர்பா' நடனம்.. மயங்கி விழுந்து பலியான மகன்.. அதிர்ச்சியிலேயே இறந்த தந்தை...!

0 2420

மகாராஷ்டிரா மாநிலம், பால்கரில் கர்பா நிகழ்ச்சியில் நடனமாடிய மகன் இறந்த செய்தி கேட்டு, தந்தையும் அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

நேற்றிரவு பால்கரிலுள்ள விரார் குளோபல் சிட்டி வளாகத்தில் கர்பா நிகழ்ச்சியில் நடனமாடும் போது மனிஷ் நாராப்ஜி சோனிக்ரா சரிந்து விழுந்துள்ளார்.

அவரை, அவரது தந்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

மகன் இறந்துவிட்டதாக கேள்விப்பட்டதும் அவர் தந்தையும் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்துள்ளார்.

இருவரின் உடல்களைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி,  வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments