தண்டையார்பேட்டையில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெற்றுவரும் நிலையில்.. 'இந்தியன் ஆயில்' கிடங்கிலிருந்து எண்ணெய் கசிவு..!

0 2213

சென்னை தண்டையார்பேட்டையில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், இந்தியன் ஆயில் கிடங்கிலிருந்து கசிந்து வரும் எண்ணெய் குடிநீருடன் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்செழியன் நகரில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட குடிநீர் குழாயில் அடிக்கடி கழிவுநீர் கலந்து விடுவதால் 37 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாய் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அப்போது நிலத்திற்கு அடியில் எண்ணெய் கலந்த கழிவு நீர் அதிகம் தேங்கி இருந்துள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் அதில் துணியை நனைத்து தீவைத்தபோது பற்றி எரிந்தது.

அருகிலுள்ள இந்தியன் ஆயில் கிடங்கிலிருந்து ஏற்படும் எண்ணெய் கசிவால் இவ்வாறு நிகழ்ந்துள்ளதாகவும், இந்த எண்ணெய் குடிநீர் குழாய்களில் உள்ள ஜாயிண்ட்கள் மூலம் குடிநீரில் கலக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியன் ஆயில் நிறுவனம் கசிவு ஏற்படாத வண்ணம் கிடங்கை முறையாகப் பராமரிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments