உணவில் விஷம் கலந்து கணவனை கொலை செய்த மனைவி கைது..!

0 2162

நெல்லை மாவட்டத்தில் மது அருந்திவிட்டு நாள்தோறும் தகராறு செய்து வந்த கணவனை, உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.

குஞ்சன்விளை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவரான சிங்காரவேலன், சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் மனைவி ஜெயக்கொடியுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வாரம் திசையன்விளை பஜாரில் வைத்திருந்த பிரதமரின் பேனரை போதையில் கிழித்ததாக கைதான சிங்கார வேலன் ஜாமினில் வெளிவந்துள்ளார்.

இன்று காலை சிங்காரவேலன் வழக்கம் போல காலை உணவு சாப்பிட்டு பின், திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், அவரது மனைவி எவ்வித சலனமும் இன்றி இருந்ததால் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், கணவனின் தொல்லை தாங்காமல் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஜெயக்கொடி வாக்குமூலம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments