மழையால் சேதமான குறுவை பயிர்களை கணக்கெடுக்க வேண்டும்.. அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்..!

0 1938

டெல்டா மாவட்டங்களில் மழையால் மூழ்கி சேதமான குறுவை பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஏக்கர் ஒன்றிற்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற, அனைத்து கொள்முதல் நிலையங்களையும் உடனே திறந்து 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறுவை சாகுபடியையும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments