நடுவானில் விமானம் பறந்த போது, தரையிலிருந்து சுடப்பட்டதில் பயணி ஒருவர் படுகாயம்..!

நடுவானில் விமானம் பறந்த போது, தரையிலிருந்து சுடப்பட்டதில் பயணி ஒருவர் படுகாயம்..!
மியான்மரில் நடுவானில் விமானம் பறந்த போது, தரையிலிருந்து சுடப்பட்டதில் பயணி ஒருவர் காயமடைந்தார். மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் 63 பயணிகளுடன் லொய்காவ் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் விமானம் பறந்தபோது, திடீரென விமானத்தை துளைத்தபடி பாய்ந்த தோட்டா அதில் பயணித்த 27 வயதுடைய ஆண் பயணியை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.
இந்நிலையில், கரென்னி தேசிய முற்போக்கு கட்சி மற்றும் மக்கள் பாதுகாப்பு படை ஆகிய கிளர்ச்சிப்படைகளே விமானத்தின் மீது தூப்பாக்கிச்சூடு நடத்தியதாக மியான்மர் ராணுவ கவுன்சில் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதனை மறுத்த கரென்னி தேசிய முற்போக்கு கட்சி, தாங்கள் பொதுமக்களை ஒருபோது இலக்காக கொள்வதில்லை என விளக்கம் அளித்துள்ளது.
Comments