ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவல் அதிகாரி..?
சென்னையில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, தான் ஒரு காவல் அதிகாரி என்று கூறிக்கொண்டு மிரட்டும் நபரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
கோயம்பேடு நோக்கிச் சென்ற பேருந்தில் கணவன்-மனைவி பயணித்துள்ளனர். இவர்களது இருக்கைக்கு பின்னால் அமர்ந்து பயணித்த நபர் தூங்குவது போல், அப்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து கேட்ட அப்பெண்ணின் கணவரையும், ஆபாச வார்த்தைகளால் திட்டி அந்நபர் தாக்க முயற்சித்துள்ளார்.
இதுகுறித்த வீடியோ காட்சிகளை சென்னை ஆவடி காவல் ஆணையத்தை டேக் செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பதிவிட்டுள்ளனர்.
Comments